ADDED : மார் 12, 2024 11:02 PM

சென்னை:தமிழகத்தில், எட்டு வீடுகள் வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொது கட்டட விதிகளின் அடிப்படையில், 2019ல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
இதன்படி, 8,073 சதுர அடி பரப்பளவில், மூன்று வீடுகளுக்கு மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயமானது.
பல தரப்பிலும் ஏற்பட்ட கோரிக்கை அடிப்படையில், எட்டு வீடுகள் வரையிலான கட்டடங்களுக்கு, பணி நிறைவு சான்று பெறுவதில் விலக்கு அளிப்பதற்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது.
இதேபோல, அதிக உயரமில்லாத கட்டடங்களின் குறைந்தபட்ச உயர வரம்பு, 39 அடிக்கு பதிலாக, 46 அடியாக கணக்கிடப்படும் என, அரசு அறிவித்து உள்ளது.
இந்த இரண்டு முடிவுகள் தொடர்பான அரசாணையை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்து உள்ளார்.

