ADDED : அக் 29, 2024 08:46 PM

கோவை: தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக கோவையில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை மெமு விழா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த MEMU ரயில்கள் ஒவ்வொன்றும் 8 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
அதிகபட்சம் 2400 பயணிகள் செல்ல முடியும். டிக்கெட்டுகளை UTS செயலியில் பதிவு செய்யலாம்.
பயணிகள் மொபைல் அப்ளிகேஷன் மூலம் காகிதமில்லா பயண டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் மற்றும் மொபைல் செயலியில் டிக்கெட் டெலிவரி செய்யப்படும்.
பயணிகள் டிக்கெட்டின் நகல் எடுக்காமல் பயணம் செய்யலாம்.
கோவை சந்திப்பில் இருந்து காலை 09.35 மணிக்கு புறப்படும் மெமு ரயில் பழனிக்கு 12.05க்கும், திண்டுக்கல்லுக்கு 13.10க்கும் சென்றடையும். மறு பயணத்தில் இந்த ரயில் 14.00 மணிக்கும், பழனியில் 15.00 மணிக்கும் புறப்பட்டு 17.30 மணிக்கு கோவை சென்றடையும்.
பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி பயணம் செய்யலாம்.

