'வின்பாஸ்ட்' கார் தொழிற்சாலை ஆக., 4ல் முதல்வர் திறப்பு
'வின்பாஸ்ட்' கார் தொழிற்சாலை ஆக., 4ல் முதல்வர் திறப்பு
ADDED : ஜூலை 31, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மின்சார வாகன உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக, ஆகஸ்ட் 3ல், முதல்வர் ஸ்டாலின், துாத்துக்குடி செல்கிறார்.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில், கடந்த 21ம் தேதி, முதல்வர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து, 27ம் தேதி வீடு திரும்பினார். ஓய்வில் உள்ள முதல்வர், இன்று முதல் தலைமை செயலகத்திற்கு வந்து, தன் வழக்கமான பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
இதைதொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 3ம் தேதி, சென்னையில் இருந்து விமானத்தில் துாத்துக்குடி செல்லவுள்ளார். அங்கு, வியட்நாம் நாட்டை சேர்ந்த, 'வின்பாஸ்ட்' நிறுவனத்தின் மின்சார வாகன தொழிற்சாலையை, 4ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இரண்டு புதிய ரக கார் விற்பனையையும் துவங்கி வைக்கவுள்ளார்.

