சென்னையில் எம்.பி.பி.எஸ். மாணவி அறையில் தூக்கிட்டு தற்கொலை!
சென்னையில் எம்.பி.பி.எஸ். மாணவி அறையில் தூக்கிட்டு தற்கொலை!
ADDED : ஆக 05, 2025 02:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் 2ம் ஆண்டு பயின்று வந்தவர் திவ்யா, இவர் டி.பி. சத்திரம் பகுதியில் அறை எடுத்து அதில் தங்கியபடி கல்லூரிக்குச் சென்று வந்தார்.
இந் நிலையில் சம்பவத்தன்று அவரது அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று திவ்யாவின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திவ்யாவின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது பற்றி தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.