திருச்சியில் மோடி பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
திருச்சியில் மோடி பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
UPDATED : ஜன 05, 2026 12:49 PM
ADDED : ஜன 05, 2026 11:57 AM

திருச்சி: திருச்சியில் பாஜ சார்பில் நடந்த மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி மன்னார்புரத்தில் நடந்த மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1008 பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பாரம்பரிய உடையில் அமித்ஷா வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். இந்த பொங்கல் விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சுவாமி தரிசனம்
முன்னதாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார்.
மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல், இணை அமைச்சர் முருகன் ஆகியோரும் உடனிருந்தனர்.
கோவிலுக்கு சென்ற போது, அங்கு திரண்டிருந்த மக்களுடன் அவர் கை குலுக்கினார். மத்திய அமைச்சர்களின் வருகையையொட்டி, திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

