பாஜ யாரையும் எதிரி கட்சியாக நினைக்கவில்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
பாஜ யாரையும் எதிரி கட்சியாக நினைக்கவில்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
ADDED : செப் 15, 2025 12:56 PM

சென்னை: ''பாஜ யாரையும் எதிரி கட்சியாக நினைக்கவில்லை'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக மோசமான அரசாக செயல்படுகிறது. கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை அரசாக செயல்படுகிறது. இந்த அரசு விலக்கப்பட வேண்டும். அதற்கு அனைவரும் ஒரு அணியில் இணைய வேண்டும். எம்ஜிஆர் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஆட்சி மாற்றத்திற்கு உதவ வேண்டும்.
பாஜ யாரையும் எதிரி கட்சியாக நினைக்கவில்லை. எதிர்க்கட்சியாக தான் நினைக்கிறோம். தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது செங்கோட்டையன் அவர்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். அது உள்கட்சி பிரச்சனை அதை நான் பேச விருப்பமில்லை. ஓபிஎஸ் இடம் நான் பேசி இருக்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.