sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதி அவசியம் தமிழக முதல்வருக்கு பாலகுருசாமி கடிதம்

 கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதி அவசியம் தமிழக முதல்வருக்கு பாலகுருசாமி கடிதம்

 கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதி அவசியம் தமிழக முதல்வருக்கு பாலகுருசாமி கடிதம்

2


ADDED : ஏப் 11, 2026 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 04:42 AM

2


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'கல்வி நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்பி, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியின்படி, ஏ.ஐ., போன்ற புதிய பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:

தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'அனைத்து உயர் கல்வி பாடத்திட்டங்களிலும் செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ., அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கென ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர்' என கூறப்பட்டுள்ளது. இது, வளர்ச்சிக்கான சிந்தனை என்றாலும், தற்போதுள்ள சூழலில், அதன் நடைமுறை சாத்தியக்கூறுகள் குறித்து கேள்விகள் எழுகின்றன.

பள்ளி, கல்லுாரிகளில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பல பல்கலைகளில், துணை வேந்தர் பதவிகள் காலியாக உள்ளன.

இத்தகைய அடிப்படை பிரச்னைகளை தீர்க்காமல், உடனடி ஏ.ஐ., கல்வி எனும் வாக்குறுதி, ஓட்டுகளை ஈர்க்கவா?

கல்வி என்பது அரசியல் கருவி அல்ல; அது தலைமுறைகளை வடிவமைக்கும் பொறுப்பான துறை. எனவே, ஆசிரியர் பணியிடங்கள், துணை வேந்தர் பதவிகளை விரைவாக நிரப்ப வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஏ.ஐ., போன்ற புதிய பாடங்களை படிப்படியாக திட்டமிட்ட முறையில் அறிமுகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us