காட்டெருமையை சுட்டு கொல்ல ஆயுதங்களை வழங்கிய முக்கிய குற்றவாளி கைது
காட்டெருமையை சுட்டு கொல்ல ஆயுதங்களை வழங்கிய முக்கிய குற்றவாளி கைது
ADDED : மார் 11, 2024 10:29 PM

ஊட்டி:குன்னுார் அருகே காட்டேரி அணைபகுதியில், காட்டெருமை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
நீலகிரி வனக்கோட்டம் குந்தா வனச்சரகத்துக்கு உட்பட்ட காட்டேரி அணை அருகே, கடந்தாண்டு அக்., 19ல் காட்டெருமை ஒன்று துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது. வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, டிச.,6ல் மூன்று பேரை கைது செய்தனர். மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலர் தலைமறைவாக இருந்தனர்.
தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில், சிறப்பு குழு அமைத்து அவர்களை தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த சைஜூ,48, ஜூலெட்,51, ஜோஸ்குட்டி,50, குட்டிகிருஷ்ணன்,47, ஆகிய நான்கு பேர், 7ம் தேதி மாலை ஊட்டி ஜே.எம்., கோர்ட்டில் சரணடைந்தனர்.
இந்நிலையில், காட்டெருமையை சுட்டு கொல்ல ஆயுதங்களை வழங்கியதாக கூறப்படும், முக்கிய குற்றவாளி சாஜி,54, என்பவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர், கூடலுார் ஓவேலி பேரூராட்சியின் காங்., கவுன்சிலராக உள்ளார். விசாரணை நடந்து வருகிறது.

