ADDED : பிப் 07, 2024 12:00 AM
சென்னை:'அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், 'அவுட்சோர்சிங்' எனும் வெளி முகமை வழியே பணியாளர்களை பணியமர்த்த, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை அணுகலாம்' என, அதன் தலைவர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், வெளி முகமை வழியே, துப்புரவுப் பணியாளர், வாட்டர் கேரியர், வாட்ச்மேன், தோட்டக்காரர், சமையல்காரர், டிரைவர், லிப்ட் ஆப்பரேட்டர், பிளம்பர், மேசன், எலக்ட்ரீஷியன், சிசிடிவி ஆப்பரேட்டர், பல்திறன் தொழில்நுட்ப வல்லுனர்கள்.
ஸ்டெனோகிராபர், தட்டச்சர், உதவி மென்பொருள் பயிற்சியாளர், திறன் பயிற்சி பயிற்றுவிப்பாளர், ஐ.டி., பணியாளர்கள், விற்பனை அதிகாரிகள் ஒருங்கிணைப்பாளர், திறமையான நிபுணர்கள் ஆகிய பணியாளர்களை, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு, பணி அமர்த்துவதற்கான ஒப்பந்ததாரர்களை, தமிழக அரசின் இ - கொள்முதல் இணைய முகப்பு வழியே கண்டறிந்துள்ளது.
எனவே, அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள், வெளி முகமை வழியே பணியாளர்களை பணி அமர்த்திட, அயல்நாட்டு வேலை நிறுவனத்தை அணுகவும். மேலும் விபரங்களை, www.omcmanpower.tn.gov.in இணையதளம் வழியே அறிந்து கொள்ளலாம்.

