ஜான்பாண்டியன், தேவநாதனுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு
ஜான்பாண்டியன், தேவநாதனுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு
ADDED : மார் 21, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளை, பா.ஜ., ஒதுக்கியுள்ளது.
சென்னை, கமலாலயத்திற்கு வந்த ஜான்பாண்டியன் கூறியதாவது:
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பா.ஜ., கூட்டணியில், ஒரு தொகுதியை பெற்றுள்ளது. எந்த தொகுதி என்பதை பா.ஜ., அறிவிக்கும். கேட்கும் தொகுதி கிடைக்கும். நான் எந்த தொகுதியில் நின்றாலும் நான் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

