அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் சுற்றுப் பயணம்; இபிஎஸ் அறிவிப்பு
அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் சுற்றுப் பயணம்; இபிஎஸ் அறிவிப்பு
ADDED : ஜன 03, 2026 04:50 PM

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் மண்டல வாரியாக ஜனவரி 7 முதல் ஜனவரி 20 வரை மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளர் இ பி எஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களின் நலனையும், முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில், பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து தரவுகளை சேகரித்து, ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கையினை தயாரிக்கும் பொருட்டு, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும், வரும் ஜனவரி 7ம் தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரை 9 மண்டலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.
* ஜனவரி 7ம் தேதி- வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை, சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி.
* ஜனவரி 8ம் தேதி- விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை.
* ஜனவரி 9ம் தேதி- தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை ராமநாதபுரம்.
* ஜனவரி 11ம் தேதி- மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.
* ஜனவரி 19ம் தேதி- கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி.
* ஜனவரி 20ம் தேதி- சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.

