நேர்மையான போலீஸ் அதிகாரியை பழி வாங்குவது அரசுக்கு நல்லது அல்ல: இ.பி.எஸ் ஆவேசம்
நேர்மையான போலீஸ் அதிகாரியை பழி வாங்குவது அரசுக்கு நல்லது அல்ல: இ.பி.எஸ் ஆவேசம்
UPDATED : ஜூலை 25, 2025 04:09 PM
ADDED : ஜூலை 25, 2025 12:37 PM

புதுக்கோட்டை: ''நேர்மையான போலீஸ் அதிகாரியை பழி வாங்குவது ஒரு நல்ல அரசுக்கு அழகு அல்ல'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
திமுக
வாக்குறுதியின் உண்மை நிலையை மக்கள் அறிய, ரிப்போர்ட் கார்டு எனும்
யோசனையை அதிமுக கையில் எடுத்தது. வீடு வீடாகச் சென்று கொடுக்கப்பட உள்ள
ரிப்போர்ட் கார்டை இ.பி.எஸ்., வெளியிட்டார். பின்னர் புதுக்கோட்டையில்
நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: யூகத்தின் அடிப்படையில்
கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது.
சஸ்பெண்ட் ஆர்டர்
திமுக
ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது. போலீஸ் அதிகாரி
நேர்மையாக செயல்பட்டால் அவருக்கு சஸ்பெண்ட் ஆர்டர் தான் பரிசாக
கொடுக்கிறார்கள்.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களை பாதுகாப்பது
போலீசார். போலீசாருக்கு ஏதும் பிரச்னை ஏற்பட்டால் அழைத்து பேசி சரி செய்ய
வேண்டும்.
அரசுக்கு அழகு அல்ல
அது
தான் ஒரு அரசின் கடமை. அதனை விட்டுவிட்டு, நேர்மையான போலீஸ் அதிகாரியை பழி வாங்குவது ஒரு நல்ல அரசுக்கு அழகு அல்ல. அதிமுக, பாஜ கூட்டணியை உடைக்க
வெளியில் பேட்டி கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கும் இருக்கும்
முதல்வரும், உதயநிதியும் பிரதமர் வீட்டு கதவை தட்டினார்களா?
இதில் என்ன தவறு?
நாங்கள்
உள்துறை அமைச்சரை சந்தித்தால் தவறு. அவர் இந்திய நாட்டு உள்துறை அமைச்சர்
தானே? வேறு யாரும் இல்லை. இதில் என்ன தவறு இருக்கிறது. நாங்கள் பாஜ- அதிமுக
கூட்டணி. நாங்கள் நிச்சயமாக ஆட்சி அமைப்போம். ஒரு கட்சி என்றால்
எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியாது. இந்த அரசாங்கத்திற்கு மக்களின்
பிரச்னை தெரிவதில்லை.
காவிரி குண்டாறு திட்டம்
கிராமத்தில்
ஒரு தோட்டம், வீடு இருக்கும். இதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்பது தவறு.
விவசாயிகள் எல்லாரும் படித்தவர்கள் அல்ல. நீங்கள் தோட்டத்தில் இருக்கும்
இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால் இது எல்லாம் செய்ய வேண்டும் என்று
அறிவிப்பு கொடுக்க வேண்டும். மக்கள் ஆதரவு உடன் மீண்டும் அதிமுக ஆட்சி
அமைக்கும் போது காவிரி குண்டாறு திட்டம் தொடரும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.