ADDED : ஜூன் 03, 2025 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜுனா அணுகுமுறையால் தான், அவராகவே எங்கள் கட்சியிலிருந்து வெளியேறி, த.வெ.க.,வில் சேர்ந்தார். அவருடைய தவறான நடவடிக்கைகளால் தான், வி.சி.,யில் சிக்கல் ஏற்பட்டது.
அதை திருமாவளவன் புரிந்துகொண்டு, அவரை ஊக்குவிக்கவில்லை. அதனாலேயே, அவர் வி.சி.,யிலிருந்து நிர்பந்தத்தின் அடிப்படையில் விலகினார். தற்போது, தன் வேலையை த.வெ.க.,வில் துவங்கி விட்டார். இனியாவது, அவரிடம் விஜய் கவனமாக இருக்க வேண்டும். இதை எச்சரிக்கையாகவே விஜய் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பாவலன், செய்தி தொடர்பாளர், வி.சி.,

