அமைச்சர் மகனுக்கு சீட்? தி.மு.க., குறி: காங்., 'ஷாக்'
அமைச்சர் மகனுக்கு சீட்? தி.மு.க., குறி: காங்., 'ஷாக்'
UPDATED : மார் 12, 2024 10:24 AM
ADDED : மார் 12, 2024 06:16 AM

ஆரணி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, தி.மு.க.,வினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
ஆரணி லோக்சபா தொகுதியில் காங்., கட்சியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் சிட்டிங் எம்.பி.,யாக உள்ளார். வரும் தேர்தலில் காங்., கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்க கூடாது என தி.மு.க.,வினர் கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
அத்துடன், தேர்தல் பணிகளை துவக்கும் விதமாக பிரமாண்ட பொதுக்கூட்டத்தை ஆரணியில் தி.மு.க.,வினர் நடத்தினர். தொடர்ந்து, தொண்டர்களை களம் இறக்கி தேர்தல் பணிகளையும் துவக்கி விட்டனர்.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள தரணிவேந்தன் அல்லது அமைச்சர் வேலுவின் மகன் கம்பன் இங்கு போட்டியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, அமைச்சர் மகனுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தி.மு.க., நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஆரணி தொகுதியில் தி.மு.க.,வினரின் புயல் வேகத்தை பார்த்து, காங்., கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
-நமது நிருபர்-

