பச்சை நிறத்துக்கு மாறிய ஏரி துர்நாற்றத்துடன் சுகாதார கேடு
பச்சை நிறத்துக்கு மாறிய ஏரி துர்நாற்றத்துடன் சுகாதார கேடு
ADDED : மார் 12, 2024 02:25 AM

வீரபாண்டி: சேலம் மாநகரின் மொத்த சாக்கடை கழிவுகளும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, திருமணிமுத்தாற்றில் கலக்கின்றன. தவிர, கரையோரத்தில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள், ரசாயன பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் ஆற்றில் கலக்கின்றன.
இந்த ஆற்றில் இருந்து வரும் கழிவுகள், ஆட்டையாம்பட்டி அருகே இனாம் பைரோஜி புதுப்பாளையம் ஏரிக்கு செல்கிறது. இதனால், கோடையிலும் ஏரி வற்றாமல் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.
மேலும், கடந்த ஒரு மாதமாக, ஆற்றில் வரும் தண்ணீரில் அதிகளவில் ரசாயன கழிவுகள் கலந்ததால், மீன்கள் செத்து மிதந்து வருகின்றன.
தற்போது ஏரி முழுவதும் தண்ணீர் பச்சை நிறத்துக்கு மாறி கடுமையான துர்நாற்றத்துடன், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆற்றில் ரசாயன கழிவு கலப்பதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

