சத்யபிரதா சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சத்யபிரதா சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
ADDED : டிச 30, 2025 10:55 PM

சென்னை: சத்யபிரதா சாகு, ஹர்சஹாய் மீனா உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தலைமைச்செயலர் முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலர் ஆக சத்யபிரதா சாகு
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலர் ஆக பழனிசாமி
நில நிர்வாக கமிஷனர் ஆக கஜலட்சுமி
போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு கமிஷனர் ஆக கிரண் குராலா
தமிழக உப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / முதன்மைச் செயலர் ஆக தேவ் ராஜ் தேவ்
அறிவியல் நகரம் துறை முதன்மை செயலர் ஆக ஹர் சஹாய் மீனா
ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி கமிஷனர் ஆக மலர்விழி
அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மற்றும் பயிற்சித் துறை தலைவர் மற்றும் இயக்குநர் ஆக கோபால சுந்தர ராஜ்
டிஎன்பிஎஸ்சி செயலர் ஆக பானோத் ம்ருகேந்தர் லால் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

