தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்; முதல் இடத்தில் எந்த மாவட்டம்? கணக்கு சொல்கிறது தேர்தல் கமிஷன்!
தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்; முதல் இடத்தில் எந்த மாவட்டம்? கணக்கு சொல்கிறது தேர்தல் கமிஷன்!
ADDED : அக் 29, 2024 01:21 PM

சென்னை: தமிழகம் முழுவதும் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலை, இன்று(அக்.,29) தேர்தல் கமிஷன் வெளியிட்டது. 2025ம் ஆண்டு வரைவு வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில் தற்போது 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகம். இதில்,
* ஆண்கள் - 3.07 கோடி,
* பெண்கள் - 3.19 கோடி,
* 3ம் பாலினத்தவர் - 8,964 பேர்.
அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தின், சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில்,
* ஆண்கள்- 3.38 லட்சம் பேர்,
* பெண்கள் - 3.37 லட்சம் பேர்,
* 3ம் பாலினத்தவர் - 125 பேர்.
குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள, கீழ்வேளூர் தொகுதியில் 1.73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில்,
* ஆண்கள்- 85,065 பேர்,
* பெண்கள் - 88,162 பேர்,
* 3ம் பாலினத்தவர் - 3 பேர்.
அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர்கள் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் பட்டியல் https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலின் இரண்டு நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படும்.

