ADDED : மார் 19, 2024 02:00 AM
சென்னை எழும்பூர் -- - கொல்லம் விரைவு ரயில் உட்பட நான்கு விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் ஓடும் விரைவு ரயில்களுக்கு, பயணியரின் தேவை அடிப்படையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிறுத்தங்கள் பயணியரின் வரவேற்பை பொறுத்து நீட்டிக்கப்படும்.
இந்நிலையில், சென்னை எழும்பூர் - -கொல்லம் விரைவு ரயில் உட்பட நான்கு விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்களை வழங்கி, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை எழும்பூர் -- கொல்லத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில், இரு மார்க்கத்திலும் உளுந்துார்பேட்டை ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்
சென்னை எழும்பூர் -- திருச்செந்துார் விரைவு ரயில் இருமார்க்கத்திலும், குத்தாலம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்
மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில், விழுப்புரம் - திண்டுக்கல் விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும், வடமதுரை ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

