எங்களுக்கும் தி.மு.க.,வுக்கும் 2026ல் தான் போட்டி: சசிகலா
எங்களுக்கும் தி.மு.க.,வுக்கும் 2026ல் தான் போட்டி: சசிகலா
ADDED : மார் 21, 2024 01:06 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூரில், பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிகலா, நிருபர்களிடம் கூறியதாவது: என்னைப் பொறுத்தவரை லோக்சபா தேர்தலில், வெற்றியை தீர்மானிப்பது மக்கள் தான். லோக்சபா தேர்தலுக்குப் பின், அ.தி.மு.க., என்பது என்ன என்பது எல்லாருக்கும் புரியும்.
மூன்று அணியாக உள்ள அ.தி.மு.க., ஒன்றாக இணைய வாய்ப்பு வந்ததாக எனது அனுமானத்தில் கருதுகிறேன்.
வரும் 2026 தேர்தல் என்பது எங்களுக்கும், தி.மு.க.,வுக்கும் நேரடி போட்டியாக இருக்கும். அந்த தேர்தலில் தி.மு.க., என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன்.
மத்தியில் எந்த ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் உணர்ந்து ஓட்டளிக்க வேண்டும். இதுவரை ஆட்சி செய்தவர்களில், எந்த ஆட்சி மக்களுக்கு பயன்பட்டதோ அந்த ஆட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும். ஓ.பி.எஸ்., இரட்டை இலை சின்னம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது, அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள பங்காளி சண்டையால் நிகழ்ந்து உள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஒரே அணியில் போட்டியிட்டு வெற்றி பெறும்.
இவ்வாறு கூறினார்.

