ADDED : ஆக 26, 2025 08:59 AM

கோவை: கோவையில் சரக்கு வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 2000 கிலோ ஜெலட்டின் வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனத்தை ஓட்டிச் சென்ற மலப்புரத்தைச் சேர்ந்த சுபேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சரக்கு வாகனத்தில் சட்டவிரோதமாக வெடிபொருள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. அந்த வகையில், கோவை மாவட்டம் மதுக்கரையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 2000 கிலோ ஜெலட்டின் வெடிபொருள் (15 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள்) பறிமுதல் செய்யப்பட்டது. வாகனத்தை ஓட்டிச் சென்ற மலப்புரத்தைச் சேர்ந்த சுபேர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஜெலட்டின் வெடிபொருள் எங்கு கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார்? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.