17 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: அதிமுக வெளியீடு
17 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: அதிமுக வெளியீடு
UPDATED : மார் 21, 2024 01:33 PM
ADDED : மார் 21, 2024 11:20 AM

சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் கொண்ட 2ம் கட்ட பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார்.
தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ல் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கான தொகுதிகளை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக.,வுக்கு 5, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா 1 என 7 தொகுதிகளை கூட்டணிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.
இதில் 16 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேற்று (மார்ச் 20) அறிவித்த நிலையில், இன்று மீதமுள்ள 17 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அத்துடன் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என அறிவித்து அதற்கான வேட்பாளரையும் அறிவித்தார்.
2ம் கட்ட வேட்பாளர்கள்
ஸ்ரீபெரம்பதூர் - டாக்டர் பிரேம்குமார்
வேலூர் - எஸ்.பசுபதி
தர்மபுரி - டாக்டர் அசோகன்
திருவண்ணாமலை - கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி - குமரகுரு
நீலகிரி - லோகேஷ் தமிழ்செல்வன்
கோவை - சிங்கை ராமச்சந்திரன்
திருச்சி - கருப்பையா
மயிலாடுதுறை - பாபு
சிவகங்கை - சேவியர் தாஸ்
திருப்பூர் - அருணாச்சலம்
பெரம்பலூர் - சந்திரமோகன்
கன்னியாகுமரி - பசிலியான் நசரேத்
தூத்துக்குடி - சிவகாமி வேலுசாமி
பொள்ளாச்சி - கார்த்திகேயன்
நெல்லை - சிம்லா முத்துசோழன்
புதுச்சேரி - தமிழ்வேந்தன்
விவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் - ராணி

