ADDED : டிச 19, 2025 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஊழலில் திளைத்துள்ளனர். தி.மு.க., அமைச்சர்கள் 17 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், முதலில் எல்லைக்கல் என்றனர். தொல்லியல் துறை அதை தீபத்துாண் என கூறியவுடன், இப்போது சமணர்கள் கல் என்கின்றனர். சமணர்கள், தீபம் ஏற்றுவது கிடையாது. நீதிக்கு தலைவணங்காத ஆட்சியாக தி.மு.க., அரசு இருக்கிறது.
பெண்கள் குறித்து மிக இழிவாக பேசும் கட்சி, தி.மு.க.,வைத் தவிர வேறில்லை. தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளன. போதைப்பழக்கத்தால் கொலை, கொள்ளை, பலாத்காரம் என அனைத்து குற்றச்சம்பவங்களும் பெருகி விட்டன.
- நயினார் நாகேந்திரன்
தலைவர், தமிழக பா.ஜ.,

