sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாவட்ட நீதிபதிகள் 16 பேர் இடமாற்றம்

/

மாவட்ட நீதிபதிகள் 16 பேர் இடமாற்றம்

மாவட்ட நீதிபதிகள் 16 பேர் இடமாற்றம்

மாவட்ட நீதிபதிகள் 16 பேர் இடமாற்றம்


ADDED : மே 27, 2025 07:03 AM

Google News

ADDED : மே 27, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழகத்தில் பணியாற்றி வரும், 16 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி பிறப்பித்துள்ளார்.

அதன் விபரம்:

l தமிழக அரசின் சொத்தாட்சியாக பணியாற்றி வந்த லிங்கேஸ்வரன், சென்னை முதன்மை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

l சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, சென்னை முதலாவது கூடுதல் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்

l வேலுார் விரைவு நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி காயத்ரி, சென்னை 2வது கூடுதல் குடும்பநல நீதிமன்றத்தின், முதன்மை நீதிபதியாகிறார்

l பூந்தமல்லி 3வது கூடுதல் மாவட்ட நீதிபதி பாலகிருஷ்ணன், மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராக மாற்றப்பட்டுள்ளார்

l சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலராக இருந்த நீதிபதி கே.சுதா, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளராக, ஆய்வு பிரிவுக்கு பொறுப்பேற்கிறார்

l ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிபதி ரோகிணி, மதுரை கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்

l கனிமவள சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோகேஸ்வரன், மதுரை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

l கடலுார் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லட்சுமி ரமேஷ், சென்னை குடும்பல நீதிமன்ற, 6வது கூடுதல் முதன்மை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்

l புதுச்சேரி அரசின் சட்டத் துறை செயலராக மாற்றுப்பணி அடிப்படையில் பணியாற்றி வந்த நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, மயிலாடுதுறை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

l சேலம் மகளிர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, சேலம் 3வது கூடுதல் மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார்

l கடலுார் வன்கொடுமை தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராமநாதன், தமிழக அரசின் சொத்தாட்சியராக நியமிக்கப்பட்டுஉள்ளார்

l மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி நாகலட்சுமி, மதுரை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கிறார்

l ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆபிரகாம் லிங்கன், சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற, 18வது கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

l மதுரை 3வது கூடுதல் நீதிபதி மாதவராமானுஜம், திருநெல்வேலி லோக் அதாலத் தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டுஉள்ளார்

l குழித்துறை கூடுதல் மாவட்ட நீதிபதி தோத்திரமேரி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 20வது கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

l நாகப்பட்டினம் போக்சோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி, திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us