sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.1,000 கோடியில் 'தொல்குடி' திட்டம்

/

ரூ.1,000 கோடியில் 'தொல்குடி' திட்டம்

ரூ.1,000 கோடியில் 'தொல்குடி' திட்டம்

ரூ.1,000 கோடியில் 'தொல்குடி' திட்டம்


UPDATED : பிப் 20, 2024 05:02 AM

ADDED : பிப் 20, 2024 01:18 AM

Google News

UPDATED : பிப் 20, 2024 05:02 AM ADDED : பிப் 20, 2024 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில், திருமணம், விளையாட்டு கூடம், கற்றல் மற்றும் பயிற்சி மைய வசதிகள் உள்ள, 120 சமூகக் கூடங்கள், 100 கோடி ரூபாயில் கட்டப்படும்

சென்னை, தஞ்சை, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில், கல்லுாரி மாணவியர் விடுதியும், மதுரையில் கல்லுாரி மாணவர் விடுதியும், 75 கோடி ரூபாயில் கட்டப்படும்

பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு, அடுத்த நான்கு ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'தொல்குடி' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர, திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக, 5 கோடி ரூபாயில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி பெறுவதற்கும், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்பட்டும்

பள்ளிவாசல், தர்காக்களை சீரமைக்க, 10 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, தென்காசி மாவட்டம் பொட்டல்புதுாரில் உள்ள தர்காக்கள் இந்த ஆண்டு சீரமைக்கப்படும்

'சர்ச்'களை சீரைமைக்க, 10 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். சென்னையில் சூளை, கடலுார் மாவட்டத்தில் விருத்தாசலம், சிவகங்கை மாவட்டத்தில் இடைக்காட்டூர் 'சர்ச்'கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் வாயிலாக, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்கள் இல்லம் சார்ந்த சிகிச்சைகள் வழங்கப்படும்

புற உலகச் சிந்தனையற்ற மன இறுக்கம் உடையோருக்கு தொடுதிறன், செயல்முறை, பேச்சு, சிறப்புக் கல்வி என, அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், சென்னையில், 25 கோடி ரூபாயில் உயர் திறன் மையம் அமைக்கப்படும்.

நகர்ப்புற பசுமை திட்டம்


'அம்ருத்' திட்டத்தில், உள்ளாட்சிப் பகுதிகளில் 4,457 கி.மீ., சாலைகள், 2,500 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்

வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆகியவற்றை துாய்மையாக பராமரித்தல், கரையோரம் பசுமை மரங்களுடன் கூடிய பூங்காக்கள், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்டவற்றிற்கு, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, கோவை நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ஆய்வு பணிகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்க, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

மாநகராட்சிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க, 'நகர்ப்புற பசுமை திட்டம்' துவங்கப்பட்டுள்ளது

மதுரை மற்றும் சேலம் மாநகராட்சிகளில், 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வினியோகம் விரிவுபடுத்தப்படும்

தனியார் பங்களிப்பு முறையில், கோவை, திருச்சி மாநகராட்சிகளில், கழிப்பறைகள் பராமரிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள், 7,890 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தால், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயனடைவர்

பெரம்பலுார் நகராட்சி; நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எருமப்பட்டி, கபிலர்மலை மற்றும் பரமத்தி ஆகிய நான்கு ஒன்றியங்கள்; திண்டுக்கல் மாநகராட்சி சின்னாளப்பட்டி, சேவுகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் துவக்கப்படும்.






      Dinamalar
      Follow us