ADDED : ஜூலை 31, 2024 07:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: திருச்சி, ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இரு தரப்பு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற சிவகுமார் என்ற ஆசிரியரின் தலையில், ஒரு மாணவர் அரிவாளால் வெட்டியதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து, கைக்கெட்டும் தொலைவில் கஞ்சா கிடைப்பதை அனுமதித்துவிட்டு, மாணவர்களை மட்டும் இத்தகைய சீர்கேடுகளுக்கு பொறுப்பாக்குவது சரியானது அல்ல.
பேனாக்களை எடுத்துச்செல்ல வேண்டிய வயதில், அரிவாளுடன் செல்வது ஏன் என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். இந்த விஷயத்தில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

