'ராகிங்' ஒழிப்பு கமிட்டி அமைக்க பல்கலைகளுக்கு உத்தரவு
'ராகிங்' ஒழிப்பு கமிட்டி அமைக்க பல்கலைகளுக்கு உத்தரவு
ADDED : ஏப் 30, 2024 05:30 AM
சென்னை : கல்லுாரிகள், பல்கலைகளில் 'ராகிங்' பிரச்னையை தவிர்க்க, மாவட்ட அளவில், ராகிங் ஒழிப்பு கமிட்டி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., வெளியிட்ட அறிவிப்பு:
உயர்கல்வி நிறுவனங்களில், வெளிநாட்டு மாணவர்கள் படிக்கும் வகையில், அனுமதித்த அளவில் இருந்து கூடுதலாக, 25 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம். இந்த கூடுதல் இடங்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
அதேபோல, உயர்கல்வி நிறுவனங்களில் ஜூனியர், சீனியர் மாணவர்கள் இடையே பிரச்னை ஏற்படுவதை தடுக்கும் வகையில், ராகிங் நடப்பதை தடுக்கும் வகையில் ராகிங் கமிட்டி அமைக்க வேண்டும்.
இந்த கமிட்டியை மாநில அளவில் மட்டுமின்றி, மாவட்ட அளவிலும் ஏற்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

