ADDED : மார் 28, 2024 01:45 AM
தென்காசி,:வேட்புமனுதாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகத்திலிருந்து நுாறு மீட்டர்க்குள் வாகனங்கள் வர தடை இருந்தும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விதியை மீறி நுழைந்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்வதாக தெரிவித்தனர்.
தென்காசி தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் புதியதமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகம் வந்தார். அதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சி கொடியுடன் 3 காரில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தார். போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறினர்.
அதற்கு கார் முன் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை காண்பித்து இந்திய அளவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல நான் பாஸ் வாங்கி உள்ளேன் என்றார். போலீஸ்சார் அவரை உள்ளே அனுப்பிவைத்து 100 மீட்டருக்குள் வாகனத்தில் நுழைந்ததால் வழக்கு பதிவு செய்வதாக கூறினர்.

