ADDED : மார் 27, 2024 06:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பொய் சொல்பவர், தவறான செயல்களில் ஈடுபடுபவர் எவரோ, அவர் பசித்திருப்பதையும் தாகித்திருப்பதையும் பற்றி இறைவனுக்கு எவ்வித அக்கறையுமில்லை' என்கிறார் நபிகள் நாயகம்.
மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. சத்தியத்தின் அடிப்படையில் ஒருவர் வாழ்க்கையை வாழ வேண்டும். இதை விட்டு விட்டு வீண் பேச்சுகளை பேசி, தரமற்ற செயல்களை செய்து விட்டு நோன்பு நோற்பதால் என்ன பயன்?.எனவே உண்பதையும், அருந்துவதையும் துறப்பது முக்கியமல்ல. சத்தியத்தின் பாதையில் நடக்கிறோமா என்பதே முக்கியம்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி

