தாயை போல பாதுகாத்து, தந்தை போல அரவணைக்கும் திட்டங்கள்: விருதுநகர் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
தாயை போல பாதுகாத்து, தந்தை போல அரவணைக்கும் திட்டங்கள்: விருதுநகர் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
UPDATED : மார் 27, 2024 08:21 PM
ADDED : மார் 27, 2024 07:46 PM

விருதுநகர்: தாயை போல பாதுகாத்து, தந்தை போல அரவணைக்கும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் என அரசின் திட்டங்களை பட்டியலிட்டு விருதுநகர் பிரசார கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
![]() |
லோக்சபா தேர்தலையொட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கிருஷ்ணன் கோயிலில் நடைபெற்ற தி.மு.க, தேர்தல் பிரசார கூட்டத்தில் தென்காசி தி.மு.க, வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் , விருதுநகர் தொகுதி காங். வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது,
நான் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் மக்கள் மாபெரும் எழுச்சியை தான் பார்க்கிறேன். தாய்மார்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கிறேன். காலை நடைபயிற்சி செய்த போது மக்கள் உரிமையுடன் வரவேற்று ஆதரவு தருகின்றனர். தாயை போல பாதுகாத்து, தந்தையை போல அரவணைக்கும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
16 லட்சம் குழந்தைகள்
மதிய உணவு போட்டால் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்புவார்கள் என சிந்தித்தவர் காமராஜர். அவரின் அடியொட்டி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்காவிட்டாலும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை நிறைவேற்றினோம். தமிழகம் முழுதும் 16 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமை பெண்கள் திட்டம் ஆகியவற்றை பெண்கள் பாராட்டுகின்றனர். தி.மு.க, ஆட்சியில் முன்னாடி திட்டங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு சிறப்பான ஆட்சி வழங்கி வருகிறோம்.
பெரிய தலைவர்களால் உருவாக்கப்பட்ட சமூக நீதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது பா.ஜ., சிறுபான்மை மக்களுக்கு மட்டுமின்றி பெரும்பான்மை மக்களுக்கும் எதிரியாக உள்ளது பா.ஜ.,
தேர்தல் பத்திர ஊழல் நாட்டின் மிகப்பெரிய ஊழல் என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கணவரே தெரிவித்துள்ளார். பிரதமராகும் முன் மோடி அப்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வரலாறு காணாத ஊழல்கள செய்துவிட்டு அதனை மறைக்க அமலாக்கத்துறை, சி.பி.ஐ., யை பயன்படுத்துகிறது மத்திய அரசு. தமிழகத்திற்கும்,தமிழனுக்கும் துரோகம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார் பிரதமர் மோடி. தேர்தல் வந்ததும், பெட்ரோல் , டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்கிறார் பிரதமர்.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை படுகுழியில் தள்ளிவிட்டது பா.ஜ. அரசு.
![]() |
காற்றில் கம்பு சுற்றும் பழனிசாமி
மண்புழு போன்று ஊர்ந்து வந்து பதவிக்கு வந்தவர் பழனிசாமி. பிரதமர் குறித்து பழனிசாமி ஏதாவது பேசியிருக்கிறாரா? காற்றில் கம்பு சுற்றுபவர் தான் பழனிசாமி. கவர்னருக்கும், எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் தமிழக அரசின் திட்டங்களை கவர்னர் தடுக்கிறார்.
தி.மு.க, வின் அடிப்படை கொள்கையே சமூக நீதிதான். தென்காசி தி.மு.க., வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் ஒரு மருத்துவர், விருதுநுகர் காங்., வேட்பாளர் மக்களுக்காக குரல் கொடுப்பவர். அவர்களை ஆதரிக்க வேண்டும்.பிரதமர் மட்டுமல்ல கவர்னர் பற்றி கூட பழனிசாமி பேசுவதில்லை. நலத்திட்ங்களை கவர்னர் தடுக்கும் போது முதல்வருக்கு வரும் கோபம் எதிர்கட்சிதலைவருக்கு வரவேண்டாமா?பா.ஜ.,கூட்டணியில் இரு்நது வெளியே வந்து விட்டோம் என நாடகமாடுகிறார்
பழனிசாமி தமிழகத்ததை மீட்பதற்கு முன் பா.ஜ.விடம் இரு்நது அதிமுகவை
பழனிசாமி மீட்க வேண்டும். ஆளும் கட்சியாக இருந்தாலும் எதி்ர்கட்சியாக
இருந்தாலும் மாநில உரிமை விசயத்தில் திமுக வுக்கு ஒரே கொள்கைதான் .
கியாரண்டியும் கிடையாது வாரண்டியும் கிடையாது
பிரதமரி்ன வாக்குறுதிகளுக்கு கியாரணடியும் கிடையாது வாரணடியும் கிடையாது. .10 ஆண்டுகளாக எதையும் செய்யாமல் சே்ல்ஸ் மேன் போல வாக்குறுதி அளிக்கிறார் பிரதமர் மோடி.தேர்தலுக்கு தேர்தல் தான் பிரதமருக்கு கருணை சுரக்கும்.தேர்தலுக்கு தேர்தல் விலைக்குறைப்பு செய்வது பச்சோந்தித் தனம் இல்லையா?410 ரூபாய்க்கு விற்ற சமையல் காஸ் சிலிண்டர் விலையை 1000 ரூபாய்க்கு மேல் உயர்த்தியது தான் உங்கள் சாதனை. விலை குறைப்பு என்பது மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி நடத்தும் நாடகம்.
சீன பட்டாசுகள் தடை செய்யப்படும் என பிரதமரின் வாக்குறுதி நிறைவேற்றப்பட வில்லை, சீன பட்டாசுகளால் சிவகாசியில் சுமார் ரூ.1,000 கோடி அளவிற்கு தொழில் நசிவு அடைந்துள்ளது. தொழில் நசிவு அடைந்த போதிலும் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைக்க வில்லை. ஆடம்பர பொருள் பட்டியலில் பட்டாசை சேர்த்து 28 சதவீதம் வரி விதித்தனர்.பசுமை பட்டாசுகள் தயாரிக்க சிவகாசி பட்டாசு ஆலைகள் தயாராக இருந்த போதிலும் மத்திய அரசு பசுமை பட்டாசு குறித்த வரைமுறைகளை வகுக்கவில்லை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
ஆண்டா்ள கோவிலில் துர்கா சாமி தரிசனம்
முதல்வர் ஸ்டாலின் கிருஷ்ணன்கோவில் கூட்டணி கட்சிவேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டத்தில் பேசினார். அதே நேரத்தில் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.


