அறிவிப்போடு நின்ற திட்டங்கள் பா.ம.க., - எம்.எல்.ஏ., புகார்
அறிவிப்போடு நின்ற திட்டங்கள் பா.ம.க., - எம்.எல்.ஏ., புகார்
ADDED : ஜூன் 28, 2024 02:40 AM
சென்னை: “அரசு அறிவித்த பல திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன,” என, பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் தெரிவித்தார்.
சட்டசபையில், அவர் பேசியதாவது:
சேலம் மேற்கு தொகுதியில், 850 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது; இடமும் தேர்வானது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் பணி துவக்கப்படவில்லை
சேலம் மஹாத்மா காந்தி விளையாட்டரங்கில், சிறிது மழை பெய்தாலும் விளையாட முடியாது. அதை, 25 கோடி ரூபாயில் சீரமைக்க, இடம் தேர்வு செய்யப்பட்டு அதுவும் நிலுவையில் உள்ளது
ஒவ்வொரு தொகுதியிலும், 3 கோடி ரூபாயில் விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை
'நம்ம ஊர் விளையாட்டு திடல்' திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இவற்றை எல்லாம் செயல்படுத்த வேண்டும்
சிறப்பு திட்ட செயலாக்க துறை வழியே செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க, குழுவில் எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற வேண்டும்
சேலம் சுற்றுச்சாலை அமைத்து தர வேண்டும்; சேலம் மாநகராட்சிக்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

