ADDED : மார் 28, 2024 06:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்;ராமநாதபுரத்தில் பா.ஜ.,ஆதரவோடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அதே தொகுதியில் அவர் பெயரை கொண்ட 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இது மக்கள் மத்தியில் பேசும்
பொருளானது. அதுமட்டுமின்றி அ.தி.மு.க.,வின் சதி எனவும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரது ஆதரவாளர்கள் பல ஊர்களில் உள்ள கோயில்களில் பூஜைகள் செய்து வழிபாடு நடத்துகின்றனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இரவு மார்ச் 27 திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பாதாள செம்பு முருகன் கோயிலில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சுவாமி தரிசனம் செய்தார்.

