ADDED : செப் 17, 2024 12:11 AM

காரைக்குடி : ''நான் தனித்து தான் போட்டுயிடுவேன். என்னுடன் சேர வேண்டுமா என்பதை மற்றவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது: இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு அடிக்கப்பட்ட மொட்டை என்பது இந்த நாட்டை ஆளும் தலைவர்களுக்கு அடிக்கப்பட்ட மொட்டை.
கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலத்தவருக்கு மொட்டை அடித்தால் இந்த அரசு அமைதியாக இருக்குமா. 40 எம்.பி., க்கள் இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை. அண்ணாதுரை காலம் வரை மதுவிலக்கு அமலில் இருந்தது.
கொரோனா காலத்தில் மது குடிக்காமல் பலர் இருந்தனர். அரசே சாராயம் விற்கும் போது, மது குடிப்பதை எப்படி தவறு என்று கூறுவார்கள். தற்போது அன்னிய முதலீடுகளைக் கொண்டு வருகிறேன் என்கின்றனர். இது தரகர் வேலையா தலைவர் வேலையா.
தனித்து நின்று நாங்கள் பெற்ற ஓட்டுக்களை காங்., பெறுமா. நான் தனித்து தான் போட்டுயிடுவேன். என்னுடன் சேர வேண்டுமா என்பதை மற்றவர்கள் முடிவு செய்யட்டும். எனது பாதை தனி. எனது பயணம் தனி என்றார்.

