நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 10,000 ஏக்கரில் புதிதாக, 7 லட்சம் தென்னங்கன்றுகள் நடவு செய்யவும், பழைய தென்னந்தோப்புகளை புதுப்பிக்கவும், தமிழக அரசு, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
இந்த திட்டத்தில், தென்னை பயிரிட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராக பயிரிடப்பட உள்ளது.

