மதுரை துபாய் விமானம் புறப்படுவதில்தாமதம்: பயணிகள் தவிப்பு
மதுரை துபாய் விமானம் புறப்படுவதில்தாமதம்: பயணிகள் தவிப்பு
ADDED : ஜூலை 24, 2024 08:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் இருந்து துபாய் செல்லும் தனியார் விமானம் புறப்படுவதில்தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
மதுரையில் இருந்து துபாய்க்கு தனியார் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில்பயணம் செய்வதற்காக பயணிகள் 40 பேர் விமான நிலையத்திற்கு வந்தனர்.
ஆனால் நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய மோசமானவானிலை காரணம் என கூறி விமானம் பறக்கவில்லை.இதனால் பயணிகள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலா விமான நிலையத்திலேயே காத்திருக்கும் நிலைஏற்பட்டுள்ளது. மேலும் காத்திருக்கும் பயணிகளுக்கு விமான நிறுவனம் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராமல் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே விமான நிறுவனம் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்படும் எனதெரிவித்து உள்ளது

