தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ படிக்கலாம் வாங்க...

படிக்கலாம் வாங்க...

படிக்கலாம் வாங்க...


ADDED : ஏப் 29, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நூலின் பெயர் : சாபம் நீங்கிய கதைகள்

ஆசிரியர் : தேனி மு. சுப்பிரமணி

வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டெட்

டோல்ப்ரீ : 1800 425 7700 / Whatsapp: 75500 09565

பக்கம் : 228 விலை : ரூ. 320

சாபம் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒருவர் யாருக்காவது கடுமையான துன்பம் இழைத்து விட்டால் பாதிக்கப்பட்டவர் விடும் சாபம் அளப்பரிய துன்பத்தை தந்துவிடும். அதிலிருந்து மீண்டு வருவது என்பது குதிரைக்கொம்பாக இருக்கும்.

பாமர மக்கள் மட்டுமல்ல, முனிவர்களும், யோகிகளும், ஞானிகளும் கூட சாபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கும் மேலாக தெய்வங்களும், தெய்வப்பிறவிகளும் கூட சாபம் பெற்றிருக்கிறார்கள் என்றால், யாருமே சாபத்திற்கு விதிவிலக்கு இல்லை என்பது தெளிவாகிறது.

நெல்லையப்ப சுவாமி, திருமால், பிரம்மா, தேவ குரு பிரகஸ்பதி, நந்தி தேவர், காமதேனு பசு மற்றும் கற்பக விருட்சம், மகாபாரத கதாநாயகி திரவுபதி, நாமெல்லாம் வெறுத்து ஒதுக்கும் திதிகளான அஷ்டமி, நவமி கூட சாபம் பெற்றிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!

சில சமயங்களில் சாபங்கள் கூட மனித குலத்துக்கு நன்மை விளைவிப்பதாக அமைந்துள்ளது.

30 தெய்வப்பிறவிகள் பெற்ற சாபங்களையும், அந்த சாபங்கள் எவ்வாறு நீங்க பெற்றது என்பதையும் அருமையாக தொகுத்துள்ளார் புத்தக ஆசிரியர் தேனி மு. சுப்பிரமணி.

இதை படிக்கும் ஒவ்வொருவரும் இனி யாருக்கும் துன்பம் இழைக்கக் கூடாது, குறிப்பாக சாபம் பெறக் கூடாது என்பதை உணர்வார்கள் என்பது உறுதி.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us