தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 29, 2024 12:30 AM
பழநி: : ''தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை நடைபெற்று சட்டம் ஒழுங்கு சரியில்லை''என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
பழநியில் அவர் கூறியதாவது: பழநி கிரி வீதியில் நீதிமன்ற உத்தரவுப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. ஆனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். பழநி அடிவாரம் பிரச்னையால் கோயில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை ஆகியவற்றின் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் மக்களுக்கு மாற்று வழிவகை செய்ய வேண்டும். டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளாதது தமிழகத்தின் நலனை புறக்கணிப்பது போன்றது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் மூலம் பயன்கள் கிடைக்கிறது. தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை நடந்து சட்டம் சரியில்லாமல் உள்ளது. பழநியில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுவது போல் திருவண்ணாமலையில் சிவ பக்தர்கள் மாநாடு நடத்த வேண்டும். பழநி கிரி வீதியில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் ஊர்வலம் நடத்தப்படும் என்றார்.

