திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு
UPDATED : ஏப் 23, 2024 04:41 PM
ADDED : ஏப் 23, 2024 04:36 PM

சென்னை: 'திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது என்பவரை வாலிபர்கள் சிலர் கஞ்சா போதையில் தாக்கினர். படுகாயம் அடைந்த கான் முகமது தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப் பொருள் புழக்கம்
இந்நிலையில், இந்த வீடியோவை எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை பகிர்ந்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. முன்னெப்பதும் இல்லாத அளவில் போதைப்பொருள் எளிதாக கிடைக்கிறது.
கொடூரமான தாக்குதல்
மதுரையில் அப்பாவி இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களில், தமிழகத்தில் கஞ்சா போதையில் கொடூரமான தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

