விபத்தில் மாவட்ட நீதிபதி பலி; ரோட்டை கடந்த போது சோகம்
விபத்தில் மாவட்ட நீதிபதி பலி; ரோட்டை கடந்த போது சோகம்
ADDED : ஜூலை 17, 2024 06:40 AM

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் ராம்ஸ் நகரை சேர்ந்தவர் கருணாநிதி, 58. இவர், பொள்ளாச்சியில் ஜூனியர் வக்கீலாக இருந்தவர், மாஜிஸ்திரேட் தேர்வில் வெற்றி பெற்று, நீதிபதியானார்.
பழநி கோர்ட்டில் பணியாற்றியவர், நீலகிரி மாவட்ட மகிளா கோர்ட் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி புஷ்பராணி,55, மாமரத்துப்பட்டியில் தலைமையாசிரியராக பணியாற்றுகிறார். இவரது மகள், திருச்சி சட்டக்கல்லுாரியில் படிக்கிறார். மகன் பி.இ., படித்துள்ளார்.
இவர், நேற்று மதியம் வீட்டில் இருந்து, உடுமலை ரோட்டில் சென்றார். காரை நிறுத்தி விட்டு, ரோட்டை கடந்து, கடைக்கு சென்றார்.
அப்போது, உடுமலை ரோட்டில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் நீதிபதி கருணாநிதி இறந்தார்.விபத்தை ஏற்படுத்திய இரு சக்கர வாகன ஓட்டுநர், நிற்காமல் வேகமாக சென்று விட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கிழக்கு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று நீதிபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விபத்து ஏற்படுத்திய இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் கஞ்சம்பட்டி நாகூரை சேர்ந்த வஞ்சிமுத்து என்பதை உறுதி செய்தனர்.

