ADDED : ஏப் 03, 2024 01:49 AM

பல்லடம்:பல்லடத்தில், கோழி பண்ணை உரிமையாளர் ஒருவரிடம், 23 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், தாராபுரம் ரோடு, புத்தரச்சல் பகுதியில், தேர்தல் பறக்கும் தடை அதிகாரிகள், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாராபுரம் -- பல்லடம் நோக்கி வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், 23.40 லட்சம் ரூபாய் இருந்தது தெரிந்தது.
விசாரணையில், காரை ஓட்டி வந்தது கோழி பண்ணை உரிமையாளர் மயில்சாமி என்பதும், பல்லடத்தில் உள்ள தனியார் வங்கியில் பணத்தை செலுத்த வேண்டி எடுத்துச் சென்றதாகவும் கூறினார்.
இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததை தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன வசம் ஒப்படைத்தனர்.

