ADDED : ஏப் 29, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : திருப்பூரை சேர்ந்தவரிடம் போலி ரத்தினக்கல் வழங்கி ரூ. 1.42 லட்சம் மோசடி செய்த வேடசந்துார் அழகாபுரியை சேர்ந்தவரை போலீசார் தேடுகின்றனர்.
திருப்பூர் பெரியபாளையம் வர்த்தக பிரமுகர் காளியப்பன் 44. இவரை தொடர்பு கொண்ட திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அழகாபுரி பாலப்பட்டியை சேர்ந்த சிங்கராஜ், 'தன்னிடம் விலை உயர்ந்த ரத்தினக்கல் இருப்பதாக' கூறி அய்யலுார் வரவழைத்துள்ளார். ரூ.1.70 லட்சம் பெற்று கொண்டு ரத்தினக்கல்லை கொடுத்துள்ளார். அது போலி கல் என்பதை தெரிந்த காளியப்பன் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். முதல் தவணையாக ரூ. 28 ஆயிரம் தந்துவிட்டு மீதியை தரவில்லை. சிங்கராஜை வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.

