ADDED : ஜூலை 25, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: இன்ஜினியரிடம் ஆன்லைனில் ரூ.7.43 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பாலகுரு மகன் பாலமுருகன்,27; இன்ஜினியர். இவரை கடந்த 3ம் தேதி டெலிகிராம் ஐ.டி., மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதிநேர பணி, சிறிய முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்க்கூறி ஒரு லிங்க் அனுப்பினார்.
அந்த லிங்கிற்குள் சென்ற பாலமுருகன், தனது விபரங்களை பதிவிட்டு, பல தவணைகளில் ரூ.7 லட்சத்து 43 ஆயிரத்து 477யை செலுத்தி டாஸ்க் முடித்தார். ஆனால், அவருக்கான தொகை வராததால், ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின்பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

