விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் மூலப்பொருள் கண்டெடுப்பு
விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் மூலப்பொருள் கண்டெடுப்பு
ADDED : ஜூலை 16, 2024 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல்கள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
விஜய கரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை என 600க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தது. நேற்று சங்கு வளையல்கள் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில் ''அதிக அளவில் சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், சுடு மண்ணால் ஆன காதணிகள் உள்ளிட்டவைகள் கிடைத்து வருகிறது. தற்போது கண்டெடுக்கப்பட்ட மூலப்பொருள் மூலம் சங்கு வளையல்கள் தயாரித்துள்ளனர்'' என்றார்.

