ADDED : மே 14, 2024 06:24 AM

நாமக்கல்: நாமக்கல் - பரமத்தி சாலை, சந்தைப்பேட்டை புதுாரில், 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில், சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பணம் முதலீடு செய்தனர்.
அதில், 100 ரூபாய்க்கு, 1.25 ரூபாய் வட்டி தந்துள்ளனர். அவற்றை நம்பி, பலரும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். துவக்கத்தில் முறையாக வட்டி தொகை வழங்கப்பட்டு வந்துள்ளது. கடந்த மார்ச்சில் நிதி நிறுவனத்தை மூடி, அதன் நிர்வாகி தலைமறைவாகி விட்டதாக கூறி, முத லீட்டாளர்கள், 100க்கும் மேற்பட்டோர், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெட்டியில் தங்கள் புகாரை அளித்தனர்.
அவர்கள் கூறுகையில், 'நிதி நிறுவனத்தை நம்பி ஏராளமானோர், 200 கோடி ரூபாய் வரை டிபாசிட் செய்திருந்தனர். அந்த பணத்தை, நிதி நிறுவன அதிபர் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டார். எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

