ADDED : மார் 24, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அரசு துறைகளின் தலைமை அலுவலகங்களை, மின்னணு அலுவலகங்களாக மாற்ற, 19.03 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளின் தலைமை அலுவலகங்கள் மற்றும் துணை அலுவலகங்களை, மின்னணு அலுவலகங்களாக மாற்ற, 2022ல் தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியது. கடந்த 2023ல் முதல் கட்டமாக, 10.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், மின்ஆளுமை முகமை தலைமை நிர்வாக அதிகாரி பரிந்துரையை ஏற்று, அனைத்து துறைகளின் தலைமை, துணை அலுவலகங்களையும், மின்னணு அலுவலகங்களாக மாற்ற, 19.03 கோடி ரூபாய் ஒதுக்க, அரசு நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

