ADDED : ஏப் 14, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குளத்தில் நீரில் மூழ்கி ரோகிணி 13, அவரது தங்கை ஹரிணி 11, இறந்தனர்.
வடமதுரை பெரியகோட்டை பாறைப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள்கள் ரோகிணி, ஹரிணி. இருவரும் அங்குள்ள பள்ளியில் முறையே 8, 6ம் வகுப்பு படித்தனர்.
நேற்று மாலை இருவரும் தாய் சத்யாவுடன் அருகிலுள்ள குளத்திற்கு சென்றனர். தாய் துணி துவைத்துக் கொண்டிருக்க சிறுமிகள் நீரில் இறங்கி குளித்தப்படி விளையாடினர். அப்போது நீரில் மூழ்கி இறந்தனர்.

