ADDED : மார் 18, 2024 08:16 PM

அந்த பத்து நாட்கள்
எப்போதும் வழிபாட்டில் ஈடுபடுவது தான் நபிகள் நாயகத்தின் வழக்கம். அதுவும் ரம்ஜான் மாதத்தில் கடைசிப் பத்து நாட்களை முழுக்க இறைவணக்கத்திலேயே கழிப்பார். பள்ளிவாசலில் நபில் தொழுகையிலும், குர்ஆன் ஓதுவதிலும், துஆவிலும் ஈடுபடுவார்.
இறை நம்பிக்கையாளர்கள் மற்ற பதினொரு மாதங்களில் ைஷத்தானுடன் போராடுவதற்கு போதிய ஆன்மிக பலம் பெறும் மாதம் ரம்ஜான். எனவே அத்தகைய வலிமை பெற மாதம் முழுவதும் இறை வணக்கத்தில் ஈடுபடுவது அவசியம். இறுதிப் பத்து நாட்கள் இதிகாப் தொழுகை இருப்பார்.
இதிகாப் என்பது இறையில்லத்தில் சிறிது காலம் தங்குவதாகும். அச்சமயத்தில் காம எண்ணத்தை தவிர்க்க வேண்டும். அவசியமான தேவையைத் தவிர மற்ற தேவைக்காக இறையில்லத்தை விட்டு
வெளியே போவது கூடாது. இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி

