/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு கழிவால் விபத்து தொழிலாளி காயம்
/
பட்டாசு கழிவால் விபத்து தொழிலாளி காயம்
ADDED : செப் 19, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்:விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி சேதுராமலிங்கபுரத்தில் ஸ்டான்டர் பயர் ஒர்க்சில் பணிகள் முடிந்து தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்றனர்.
மாலை 6:30 மணிக்கு பட்டாசு ஆலையில் பணிபுரியும் துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார், 50. காட்டுப் பகுதியில் பட்டாசுக் கழிவுகளை கொட்டும் இடத்தில் மணி மருந்து கழிவை கொட்டி விட்டு பீடி பற்ற வைத்துள்ளார். தீக்குச்சியை அணைக்காமல் கழிவுகள் மீது வீசியபோது அவை வெடித்து விபத்து ஏற்பட்டது. ஜெயக்குமார் 90 சதவீதம் தீக்காயம் அடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெம்பக் கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

