நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டியில் சமம் பெண்கள் கூட்டமைப்பு சார்பா சர்வதேச மகளிர் தினவிழா, சமத்துவ மக்கள் மன்ற 15 வது பொதுக் குழு கூட்டம் நடந்தது.
நிறுவனர் ஞானபாக்கியம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர், பாப்பாத்தி முன்னிலை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் எஸ்தர் வரவேற்றார். கலெக்டர் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் துவக்கி வைத்தார்.
வட்டார அளவில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை மையம், மகளிர் குறை தீர்க்கும் மையம், அரசு பெண்கள் தொழிற் பயிற்சி மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமம் கூட்டமைப்பு தலைவராக பாப்பாத்தி, செயலாளராக சங்கீதா, பொருளாளராக எஸ்தர், துணைத் தலைவர்களாக ஞானபாக்கியம், அவ்வா நாச்சியார், ராஜம்மாள் , ஜெயந்தி, துணை செயலாளர்களாக ஆதிலட்சுமி, வசந்தி, மனோன்மணி, உமாதேவி, சாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

