/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
/
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
ADDED : டிச 17, 2025 06:02 AM

கோவில்பட்டி: தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மூன்றாவது கட்டமாக, 12ம் தேதி விரிவுபடுத்தப்பட்டது.
இந்த திட்டம் விரிவாக்கத்திற்கு பிறகும் தொகை கிடைக்காததால், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு, கடம்பூர் என சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் பலர், கோட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று திரண்டு முற்றுகையிட்டனர்.
'எங்களுக்கு ஏன் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை; என்ன காரணத்திற்காக எங்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன; அதற்கான குறுஞ்செய்தி ஏன் வரவில்லை' என, அதிகாரிகளிடம் பெண்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினர்.
'சர்வர் பிரச்னை இருப்பதால், மனு ஏன் நிராகரிக்கப்பட்டது என கூற இயலாது; விரைவில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று, விண்ணப்பங்களை கொடுங்கள்' என, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
'பல முறை மனு அளித்தும், எங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை. இன்னும் எத்தனை முகாமிற்கு சென்று விண்ணப்பம் செய்வது' என கூறிய பெண்கள், வேதனையுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

