ADDED : அக் 23, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: வெம்பக்கோட்டை அணை நேற்று முழு கொள்ளளவான 22 அடியை எட்டியதை தொடர்ந்து அணை திறக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வருகின்றன.
வெம்பக்கோட்டை அணையில் 22 அடி தண்ணீர் தேக்கப்படுகிறது.நேற்று மாலை 6:30 மணிக்கு அணை முழு கொள்ளளவை அடைந்ததை தொடர்ந்து அணைக்கு வரும் 600 கன அடி தண்ணீர் பாதுகாப்பு கருதி அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
வெம்பக்கோட்டை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் கரையோர பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.